ஆள் சேர்ப்பில் அவசரம் காட்டும் அதிமுக: ஆகஸ்ட் 8 கெடு!!

சனி, 1 ஆகஸ்ட் 2020 (11:13 IST)
அதிமுகவினருக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 
 
அதிமுக தலைமை தனது உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், புதிய உறுப்பினர்களின் சேர்க்கை மற்றும் உறுப்பினர்கள் தங்களது பதிவை புதுப்பிக்கம் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
உரிய கட்டண தொகையுடன் விண்ணப்ப படிவத்தை ஆகஸ்ட் 8-க்குள் சமர்ப்பிக்கமறும் கெடு விதிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே கட்சி அமைப்புத் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ராமர் கோவில் வரும் பிரதமர்: பாதுகாப்பு பணிக்கு வரும் இளம் படையினர்!