Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டு முதலமைச்சர் பழனிச்சாமியைப் பாராட்டுகிறேன்: வைரமுத்து

Advertiesment
தமிழ்நாட்டு முதலமைச்சர் பழனிச்சாமியைப் பாராட்டுகிறேன்: வைரமுத்து
, திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (12:40 IST)
மத்திய அரசின் மும்மொழி கொள்கையுடன் கூடிய புதிய கல்வித் திட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்ட ஒரு அறிக்கையில் ’தமிழகத்தில் மும்மொழி கொள்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் மாண்புமிகு அம்மாவின் அரசின் கொள்கையான இரு மொழிக் கொள்கைதான் அமல்படுத்தப்படும் என்றும் மும்மொழிக் கொள்கையை குறித்த அறிவிப்பு வேதனையை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது என்றும் அவர் உறுதி கூறியிருக்கிறார். முதல்வரின் இந்த அறிவிப்பு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இருப்பினும் மும்மொழி கொள்கை மட்டுமின்றி புதிய கல்வித் திட்டத்தையே ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் 
 
இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து தற்போது கவியரசு வைரமுத்து அவர்களும் தனது டுவிட்டரில் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
இருமொழிக் கொள்கையில் 
உறுதிகாட்டியிருக்கும்
தமிழ்நாட்டு முதலமைச்சர் 
பழனிச்சாமியைப் பாராட்டுகிறேன்;
தமிழ் உணர்வாளர்கள் சார்பில்
நன்றி தெரிவிக்கிறேன்.
கோரிக்கை வைக்க உரிமையிருந்த எனக்கு
நன்றி சொல்லும் கடமையுமிருக்கிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுதான் லிமிட்…. அதைத் தாண்டமாட்டேன் – ஆண்ட்ரியாவுக்கு இப்படி ஒரு நல்ல பழக்கமா?