Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு முறை தான் சிக்குவேன்... வைரஸ் ப்ளாக் அவுட்டுடன் சுற்றும் செல்லூரார்!

ஒரு முறை தான் சிக்குவேன்... வைரஸ் ப்ளாக் அவுட்டுடன் சுற்றும் செல்லூரார்!
, திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (16:19 IST)
பொதுப்பணியில் ஈடுபட்டுள்ள செல்லூர் ராஜு கருத்தில் அடையாள அட்டை போன்ற கொரோனா தடுப்பு அட்டையை அணிந்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் மக்களிடையே கோர தாண்டவமாடி வரும் கொரோனா அரசியல் பிரமுகர்களையும் தொடர்ந்து தாக்கி வருகிறது. அதிமுக அமைச்சர்களான கே.பி அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்து வீடு திரும்பினார். போகிற போக்கில் கொரோனா என்னை டச் பண்ணி போய்விட்டது என கொரோனாவில் இருந்து குணமானதை நகைச்சுவையாக வெளிப்படுத்தினார். 
தற்போது பொதுப்பணியில் ஈடுபட்டுள்ள அவர் கருத்தில் அடையாள அட்டை போன்ற கொரோனா தடுப்பு அட்டையை அணிந்துள்ளார். 'வைரஸ் ப்ளாக் அவுட்' என்ற பெயரில் ஜப்பான் நிறுவனம் இந்த அட்டையை வெளியிட்டுள்ளது.
 
அட்டைக்குள் குளோரின் டை ஆக்ஸைடு நிரப்பப்பட்டுள்ளது. 1 மீட்டர் சுற்றளவில் காற்றில் வைரஸ் பரவுதலை இந்த அட்டை கட்டுப்படுத்தும். எனினும், கொரோனா வைரஸை இந்த அட்டை கொல்வதாக நிரூபிக்கப்பட்ட ஆய்வு எதுவும் இல்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயோத்தி கோயில் அடிக்கல் நாட்ட குறிக்கப்பட்டுள்ள நேரம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள்