தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி கோவையில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்துள்ளது. அதற்கான சிகிச்சை தற்போது அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அமைச்சரின் உடல்நிலை குறித்த விரிவான அறிக்கை விரைவில் மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தி.மு.க தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.