தீபாவளி நெருங்கி வரும் நிலையில் அரசு துறைகள் பரிசுகள் வழங்க பொது நிதியை பயன்படுத்தக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் தீபாவளியும் நெருங்கியுள்ளது. பொதுவாக தீபாவளிக்கு முன்னதாக மத்திய, மாநில அரசு துறைகளில் அதிகாரிகள் மற்றும் இதர துறையினருக்கு ஸ்வீட்ஸ் மற்றும் அன்பளிப்பு பொருட்களை வழங்குவது ஒரு சம்பிரதாயமாக இருந்து வருகிறது.
இவ்வாறாக அதிகாரிகள், பிற துறைகளுக்கு இனிப்புகள், அன்பளிப்புகள் வழங்கப்படும்போது அதை அரசு செலவிலேயே அந்தந்த துறைகள் பதிவு செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளிக்காக உயர் அதிகாரிகள், பிற துறை அதிகாரிகளுக்கு அன்பளிப்பு வழங்க அரசின் பொது நிதியை பயன்படுத்தக் கூடாது என்றும், அந்த செலவினங்களை அவரவர் சொந்த செலவாகவே ஏற்றல் வேண்டும். மக்கள் பணத்தில் தீபாவளி அன்புளிப்பு கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
Edit by Prasanth.K