Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மருத்துவாம்னையில் மருத்துவ மாணவியின் பிணம்.. கோவையில் பரபரப்பு..!

Mahendran
திங்கள், 7 ஜூலை 2025 (10:27 IST)
கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாமக்கல் பகுதியை சேர்ந்த பவ பூரணி என்ற மருத்துவ கல்லூரி மாணவி, தனியார் மருத்துவ கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு பயிற்சிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றி கொண்டிருந்த நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை கழிவறையில் அவர் பிணமாகக் கிடந்தார். இது குறித்த தகவல் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பவபூரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. ஆனாலும் ஒரு சின்ன ஏமாற்றம்..!

எனது கணவர் மாட்டிறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்துகிறார். இஸ்லாமியரை திருமணம் செய்த இந்து பெண் புகார்..!

நான் அமைச்சரும் இல்லை.. என்னிடம் நிதியும் இல்லை.. வெள்ள சேதத்தை பார்வையிட்ட நடிகை கங்கனா புலம்பல்..!

பீகார் தொழிலதிபர் கொலை.. இறுதிச்சடங்கை நோட்டமிட்ட கொலையாளி கைது?

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments