Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிகரெட்டால் சூடு.. மூளையில் ரத்தக்கசிவு.. அஜித்குமார் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்..!

Advertiesment
அஜித் குமார்

Siva

, வெள்ளி, 4 ஜூலை 2025 (07:44 IST)
திருப்புவனம் மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித் குமார், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு அங்கேயே அடித்து கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தற்போது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அஜித் குமாரின் உடலில் வெளிப்புறத்தில் சிராய்ப்புகள் மற்றும் 44 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், ரத்தக்கட்டு காயங்கள் இருந்ததாகவும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, அஜித் குமார் பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக சிகரெட்டால் சூடு வைத்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த தகவல்கள் அஜித் குமாரை காவல்துறை அதிகாரிகள் எந்த அளவுக்கு சித்திரவதை செய்திருக்கிறார்கள் என்பதை புரிய வைப்பதாக கூறப்படுகிறது.
 
பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. மொத்தத்தில், ஒரு அப்பாவி இளைஞர் செய்யாத குற்றத்திற்காக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது.
 
சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!