கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க துவங்கி ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் மன்சூர் அலிகான். அந்த படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கவே தொடர்ந்து பல படங்களிலும் வில்லனாக நடித்தார். குறிப்பாக விஜயகாந்தின் பெரும்பாலான படங்களில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார்.
மன்சூர் அலிகானுக்கு நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவை, மக்கள் புரட்சி மற்றும் அரசியலிலும் அதிக ஆர்வம் உண்டு. தனியாக கட்சி கூட துவங்கினார். பல தேர்தல்களில் இவர் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் பெரிதாக வாக்குகளை வாங்கவில்லை. சீமான் நம் தமிழர் கட்சியில் இணைந்து அக்கட்சியின் சார்பாக 2019ம் வருடம் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
202 சட்டமன்றத் தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதிகள் சுயேச்சையாக நின்றார். 20204 பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் எதிலுமே மன்சூர் அலிகான் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளிடம் பேசிய மன்சூர் அலிகான். நாம் தமிழர் கட்சியில நான் இருந்தபோது மாடு மாதிரி உழைச்சி என்னோட கைக் காசை போட்டு தேர்தலில் போட்டி போட்டேன்.. ஆனா என்னை நிக்க வச்சு பிஜேபிகிட்ட பணம் வாங்கிருக்கார்னு அந்த கட்சியில் இருந்த ஒரு பெண் சொல்லிதான் எனக்கே தெரியவந்தது. அவரை நான் தப்பும் சொல்ல முடியாது. ஏன்னா கட்சி நடத்த பணம் தேவைப்பட்டிருக்கலாம். ஆனா சீமானும் பாசிச சக்திகளுக்கு துணை போறாரு என பேசியிருக்கிறார்.