Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை உணவு கடை.. மத்திய அமைச்சர் திறப்பு..!

Advertiesment
Ulundu vadai

Siva

, வியாழன், 27 பிப்ரவரி 2025 (18:29 IST)
சென்னை விமான நிலையத்தில் இதுவரை உணவு பொருட்கள் மிக அதிக விலைக்கு விற்பனையாகிய நிலையில், தற்போது மலிவு விலை உணவகத்தை மத்திய அமைச்சர் திறந்து வைத்ததை அடுத்து, விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
சென்னை விமான நிலையத்தில் தண்ணீர் பாட்டில் ₹125, இட்லி ₹250, பிரியாணி ₹450 என விற்பனையாகி வந்ததால், பயணிகள் உணவுப் பொருட்களை வாங்கத் தயங்கிக் கொண்டிருந்தனர்.
 
இந்த நிலையில், பயணிகளின் வசதியை முன்னிட்டு  மலிவுவிலை உணவக திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஏற்கனவே கொல்கத்தா விமான நிலையத்தில் இந்த கஃபே திறக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலும் திறக்கப்பட்டுள்ளது.
 
மாற்றுத்திறனாளிகள் நடத்தும் இந்த உணவகத்தில், தண்ணீர் பாட்டில் ₹10, டீ ₹10, காபி ₹20, வடை ₹20 என மலிவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், பயணிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சாப்பிட்டு வருகின்றனர்.
 
இந்தக் கஃபேவை மத்திய அமைச்சர் ராமேஷ் நாயுடு திறந்து வைத்ததுடன், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், இந்த திட்டத்தால் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரியலூர் அரசு பள்ளி ஆசிரியர் கைது..!