Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரியலூர் அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

Advertiesment

Mahendran

, வியாழன், 27 பிப்ரவரி 2025 (17:03 IST)
அரியலூரில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில தினங்களாக, பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அரியலூரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவிக்கு, தமிழ் ஆசிரியர் சுரேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று அந்த ஆசிரியர் மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவி இது குறித்து பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
 
இதனை அடுத்து, மாணவிக்கு தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் சுரேஷ், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
6ஆம் வகுப்பு மாணவிக்கு, அவரது பள்ளியின் ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், சமூகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடிக்கணக்கில் கிரிப்டோ கரன்சியில் மோசடி.. தமன்னா, காஜல் அகர்வாலிடம் விசாரணையா?