வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழையும் மிக கன மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில், பலத்த காற்று காரணமாக சென்னை பூங்கா நகர் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கடற்கரை–தாம்பரம்–இருமாக்கம் இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் அறியப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் நிலையில், ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியுற்று உள்ளனர்.
சற்றுமுன் வெளியான தகவல் படி, சென்னை புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் கடற்கரை–பல்லாவரம் மற்றும் செங்கல்பட்டு–வண்டலூர் இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. பல்லாவரம் முதல் வண்டலூர் வரை தற்காலிகமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொடர் க்ச்ன்ச்மழை காரணமாக, சென்னை விமானங்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் உள்ள பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை மாநகர பேருந்து சேவை இயக்கி வருகிறது. விமான நிலையத்திலிருந்து பிராட்வே, கோயம்பேடு, கிளம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.