திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரிக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாளை தீபத்திருவிழா நாளில் திருவண்ணாமலைக்கு எந்த மழை எச்சரிக்கையும் இல்லை என்பது பக்தர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
இதற்கிடையே, இன்று திருவள்ளூர் மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.