தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், டிசம்பர் 4-ஆம் தேதி சேலத்தில் நடத்த திட்டமிட்டிருந்த பிரசார பொதுக்கூட்டத்திற்குச் சேலம் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
டிசம்பர் 3-ஆம் தேதி கார்த்திகை தீபம் பண்டிகை வருவதால், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் சேலம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் ஈடுபட வேண்டும்.
இந்த காரணங்களால் டிசம்பர் 4-ஆம் தேதி பிரசார கூட்டத்திற்குப் போதுமான பாதுகாப்பு வழங்க இயலாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானதை தொடர்ந்து, பிரசாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தவெக தற்போது மற்றொரு மாற்று தேதியை கோரி மனு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.