தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பதற்காக கரூர் செல்கிறார். தனது கட்சி நிர்வாகிகளை ஏற்கெனவே அனுப்பியிருந்த கமல்ஹாசன், இன்று பிற்பகல் நேரில் ஆறுதல் கூறுகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக, தவெக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இரண்டு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட இரு மூத்த தலைவர்களின் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால், அவர்கள் தலைமறைவாக உள்ளனர். கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டங்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்துள்ளது.