படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு செல்லும் விஜய், அரசியல் கூட்டத்திற்கும் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டாமா என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் சம்பவம் நடந்தவுடன், "வீட்டில் போல் உட்கார்ந்து கொண்டார். ஓடி ஒளிந்து கொண்டார். ஒரு தலைவனுக்கு இதுவா அழகு? நம்மால் ஒரு குடும்பத்திற்குப் பிரச்சினை என்றால், தேமுதிக போல் முதல் ஆளாக முன்னிற்க வேண்டும். ஆனால், அதை விஜய் செய்யவில்லை," என்று அவர் விமர்சித்தார்.
மேலும், "படப்பிடிப்புத் தளங்களுக்கு மட்டும் குறித்த நேரத்தில் விஜய் சென்று விடுவார். ஆனால், அரசியல் கூட்டத்திற்கு அவர் சரியான நேரத்திற்கு செல்லவில்லை. மக்கள் காத்திருக்கின்றனர் என்ற பொறுப்பு வேண்டாமா? தன்னுடைய கடமை உணர்வை அவர் தவறிவிட்டார்.
கரூர் கூட்டத்தை முடித்துவிட்டு விமானம் பிடித்து சென்னை சென்றவர்தான், இன்று வரை வெளியே வரவில்லை. இப்படி இருக்கும் ஒரு அரசியல் தலைவர் மக்களை எப்படி காப்பாற்றுவார்?" என அவர் வெளிப்படையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.