தங்கம் விலை கடந்த சில நாட்களாக மிக வேகமாக உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,000-ஐத் தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,950
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 11,060
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 87,600
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 88,480
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,945
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,065
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 95,560
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 96,520
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 163.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 163,000.00