தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் ஒரு பகுதியாக, தகுதியற்ற சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 15 சதவீதமாகும். குறிப்பாக சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் அதிகப்படியான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் தங்கள் பெயர் விடுபட்டுள்ளதா என்பதை அறிய electoralsearch.eci.gov.in அல்லது elections.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக சரிபார்க்கலாம். பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், அதனை மீண்டும் சேர்க்க ஜனவரி 18-க்குள் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக அந்தந்த வாக்குச்சாவடிகளில் டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பெயர் நீக்கத்திற்குப் படிவம் 7-யும், திருத்தங்களுக்குப் படிவம் 8-யும் பயன்படுத்தலாம். திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17, 2026 அன்று வெளியிடப்படும். வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் ஜனநாயக கடமையை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.