Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

SIR-க்கு பின் ஓட்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?!... வாங்க பார்ப்போம்..

Advertiesment
SIR

BALA

, வெள்ளி, 19 டிசம்பர் 2025 (19:31 IST)
SIR - பணிகள் முடிந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தற்போது எடுத்துள்ள தகவல்படி தமிழகத்தில் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தங்கள் மாவட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். சரியான முகவரியில் இல்லாதவர்கள், உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள்,  இரட்டை பதிவு கொண்டவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ள முடியும். அதில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், பெயர், வயது, தொகுதி ஆகியவற்றை பதிவிட்டு தெரிந்துகொள்ள முடியும்.
 
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள லிஸ்ட்டில் பெயர் இல்லாதவர்கள் என்ன செய்யவேண்டும் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அளித்திருக்கிறார்.
 
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் BLO-க்களை அணுகலாம். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாவட்டம் தோறும் நடத்தப்படும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்குச்சாவடி வாரியாக சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். 
எனவே இவற்றில் ஏதேனும் ஒன்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓசூரில் காவேரி கூக்குரல் சார்பில் ‘ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு: மத்திய வேளாண்துறை அமைச்சர் பங்கேற்பு..!