Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமித்ஷாவை சந்திக்கிறார் டாக்டர் ராமதாஸ்.. 30 தொகுதிகள் கேட்க திட்டம் என தகவல்..!

Advertiesment
பாமக

Siva

, ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (15:08 IST)
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, கட்சி இரண்டாகப் பிரிந்துள்ளது. இரு தரப்பினரும் தங்களுக்குத்தான் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் உள்ளது என உரிமை கொண்டாடி வருகின்றனர். 
 
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பு அடுத்த சில நாட்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும்  திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுடனும் பாமக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி எந்த கூட்டணியில் இணைந்தாலும், பாமகவுக்கு 30 தொகுதிகள் கேட்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ராமதாஸின் இந்தத் திடீர் அரசியல் நகர்வுகள், தமிழக அரசியலில் பாமகவின் எதிர்கால நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்.. இதே பகுதியில் 2001ல் நிலநடுக்கத்தால் 20 ஆயிரம் பேர் பலி..!