பாமகவில் ராமதாஸ் அன்புமணி இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில் பாமகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய அவர் “சேலம் மாவட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. பாமக எம்.எல்.ஏக்களான அருள் மற்றும் சதாசிவம் நமது கூட்டணி கிடையாது. ஆனாலும், இருவரும் அரசு திட்டங்களுக்காக போட்டிப்போட்டுக் கொண்டு ஒற்றுமையாக பாராட்டி உள்ளனர்.
பாமகவினர் இதேபோல ஒற்றுமையாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும்” என பேசியுள்ளார்.
அன்புமணி - ராமதாஸ் இருவரும் ஒன்றாக இருந்து பாமகவை வலுப்படுத்த வேண்டும் என்பதைதான் உதயநிதி இருதரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்களையும் சிலேடையாக பயன்படுத்திக் குறிப்பிடுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K