பாமக செயல் தலைவராக இருந்த அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக கட்சியில் நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி செயல் தலைவருமான அன்புமணி இடையே கடந்த சில காலமாக தொடர்ந்து முரண்பாடு நிலவி வந்த நிலையில், பொதுக்குழுவில் அன்புமணி மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு விளக்கமளிக்க கால அவகாசம் அளித்து அன்புமணி பதில் அளிக்காத நிலையில் அவரை கட்சியை விட்டு நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். ஆனால் ராமதாஸை சந்தித்து பேச அன்புமணி முயன்றதாகவும், ஆனால் ராமதாஸ் மறுத்து விட்டதாகவும் அன்புமணி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து ஆவேசமாக பேசிய ராமதாஸ் “என்னுடன் பேச 40 முறை முயன்றதாக அன்புமணி கூறுவது சுத்தப் பொய். அண்டப்புளுக்கு, ஆகாசப்புளுகு கூட அல்ல. அதை விட மோசமான ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய். என்னையே உளவு பார்த்தவர்தான் அன்புமணி. அவர் தனிக்கட்சி தொடங்குவதாக இருந்தால் தொடங்கலாம் என ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டேன். அவர் தனிக்கட்சி தொடங்கினாலும் அது வளராது” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K