Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3,5,8-ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் Fail! - தேசிய கல்விக் கொள்கை அமல்!

Prasanth Karthick
வெள்ளி, 2 மே 2025 (08:49 IST)

மத்திய அரசின் CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டு குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில் என்ற முறை அமலுக்கு வருகிறது.

 

நாடு முழுவதும் மத்திய அரசின் CBSE  பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அமலில் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் படி 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு உள்ளிட்ட புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

 

அந்த வகையில் CBSE பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் அவர்கள் ஃபெயில் என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது. இதற்காக பெற்றோர்களிடமும் ஒப்புதல் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

 

இந்த கல்வியாண்டே இந்த நடைமுறையை அமல்படுத்த இருந்த நிலையில் சில வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் ஏப்ரல் மாதம் முடிவதற்குள் திருத்தப்பட்டு, அவர்கள் அடுத்த வகுப்புகள் சென்றுவிட்டதால், அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு.. எங்களை காப்பாற்றுங்கள் என ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!

சாப்பாடு மட்டுமல்ல, தங்கத்தையும் டெலிவரி செய்யும் ஸ்விக்கி.. இனி வீட்டில் இருந்தே தங்கம் வாங்கலாம்..!

வான்வழியை திடீரென மூடிய இந்தியா: தென்கிழக்கு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் பாகிஸ்தான்..!

26 வருடங்கள் காஷ்மீர் போலீசில் பணிபுரிந்த பாகிஸ்தானியர்.. 8 சகோதரர்களுடன் நாடு கடத்தலா?

இனி போலி பாஸ்போர்ட்டில் ஒருவர் கூட வரமுடியாது: மோடி அரசின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments