Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு.. எங்களை காப்பாற்றுங்கள் என ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!

Siva
வெள்ளி, 2 மே 2025 (07:44 IST)
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்றும், இந்திய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானை தாக்கலாம் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், கடைசி முயற்சியாக போரை நிறுத்த பாகிஸ்தான் ஐநாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், "ஐநா நினைத்தால் இந்த போரை தடுக்கலாம். எனவே இந்திய தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
 
பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தலைவர் சுல்தான் சவுத்ரி என்பவர் ஐநாவுக்கு எழுதிய கடிதத்தில், "ஏதாவது செய்தி எங்களை காப்பாற்றுங்கள். ஐநா நினைத்தால் இந்த போரை தடுத்து, நடக்கக்கூடிய விபரீதத்தையும் தடுக்கலாம். ஐநா பொதுச் செயலாளர் தலையிட வேண்டிய சரியான நேரம் இதுதான். காஷ்மீரில் மக்கள் மிகவும் அச்சத்துடன் இருக்கிறார்கள்" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
 
இதனை அடுத்து, ஐநா இந்த விஷயத்தில் தலையிட்டு இந்தியா–பாகிஸ்தான் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments