அமைச்சர் பொன்மாடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், இது குறித்து தாமாக முன்வந்து ஐகோர்ட் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ய பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடி பேச்சு பெண்களை மட்டுமின்றி சைவம், வைணவம் மதத்தையும் இழிவு படுத்தும் வகையில் உள்ளது என்றும், வெறுப்பு பேச்சை சகிக்க முடியாது என்றும் தெரிவித்தார். தமிழகப் போலீசார் அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டமானது என்றும் கூறினார்.
புனிதமான பட்டை நாமத்தை விலை மாது சேவையுடன் அமைச்சர் பொன்முடி ஒப்பிட்டு பேசியுள்ளார். மத உணர்வுகளை பாதிக்கும் வகையிலும், ஆபாச மட்டுமல்லாது இரண்டு சமய மக்களையும் புண்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். ஆனால் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இந்த வழக்கை தாமாக முன்வந்து, விசாரணைக்கு எடுக்க வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.