பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் முதல்முறையாக ஆளுநரை சந்திக்க செல்லும் நிலையில் பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த வந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் புதிய தலைவருக்கான மனுக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் நயினார் நாகேந்திரன் தேர்வானார். பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை திட்டமிட்டு கட்சியை நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க செல்கிறார். பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து சமீபத்தில் திமுக அமைச்சர் பொன்முடி பேசியிருந்தது திமுகவினராலேயே கண்டனத்திற்கு உள்ளானது, கட்சியில் அவரது பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று ஆளுநரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன், பொன்முடி மீது ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K