தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டல சுழற்சியால் கனமழை 3 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 16ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
செப்டம்பர் 17ம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 18ம் தேதி திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K