சென்னை உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவுக்கு இடையே நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் தென்னிந்திய கடலோர பகுதிகளில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு அடுத்த இரு நாள்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, தெற்கு ஒடிஸா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு இடையே கடந்து செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன்படி, காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது