வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

Mahendran
வெள்ளி, 21 நவம்பர் 2025 (15:28 IST)
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் இன்று  10 மாவட்டங்களிலும், நாளை  11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியே இதற்கு காரணமாகும். மேலும், நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், அது நவம்பர் 24ஆம் தேதி வாக்கில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள 10 மாவட்டங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால்.
 
நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 11 மாவட்டங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்  மற்றும் காரைக்கால் 
 
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments