Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாற்றமின்றி விற்பனையாகி வரும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

Advertiesment
Gold Price today

Prasanth K

, ஞாயிறு, 26 அக்டோபர் 2025 (11:56 IST)

தங்கம் விலை கடந்த சில வாரங்களில் கிடுகிடு உயர்வை சந்தித்த நிலையில் தற்போது சரிந்து விழுந்து ஒரே விலையில் தொடர்ந்து வருகிறது.

 

உலகளாவிய காரணங்களால் கடந்த சில மாதங்களில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்த நிலையில் விலையும் பன்மடங்கு ஏறியது. கடந்த 21ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் சவரன் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனையாகி வந்த நிலையில் மறுநாளே கிடுகிடுவென சரிந்து ரூ.92,320 ஆக சரிந்தது. அதற்கு அடுத்த நாள் ரூ.92,000 ஆகவும், அடுத்த ரூ.91,200 வரையிலும் சரிந்தது.

 

நேற்று சற்று விலை உயர்ந்து மீண்டும் ரூ.92,000 ஐ அடைந்த தங்கம் இன்றும் விலை ஏற்ற இறக்கமின்றி அதே விலையில் தொடர்கிறது. ஒரு கிராம் ஆபரண தங்க ரூ.11,500க்கு விற்பனையாகி வருகிறது.

 

வெள்ளி கடந்த 3 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி கிராம் ரூ.170 என்ற அளவில் தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றே புயலாக வலுவடையும் மோன்தா! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!