Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எகிறிய வேகத்தில் வீழும் தங்கம்! இன்னும் குறையுமா? காரணம் என்ன?

Advertiesment
Gold price rise

Prasanth K

, புதன், 22 அக்டோபர் 2025 (12:13 IST)

கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென விலை ஏறி வந்த தங்கம் விலையால், மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில் இன்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 வரை குறைந்துள்ளது.

 

தங்கம் விலை கடந்த சில மாதங்களில் மிகவும் விலை குறைந்துள்ளது இதுவே முதல்முறையாகும். இதனால் மக்கள் இன்றே தங்கம் வாங்கிவிடலாமா என்று எண்ணும் அதேசமயம், பலர் இன்னும் கொஞ்சம் கூட குறையலாம் காத்திருப்போம் என்றுன் எண்ணுகின்றனர்.

 

ஆனால் தங்கம் விலையோ நமது கையில் இல்லாமல் சர்வதேச காரணிகளால் முடிவு செய்யப்படும் விஷயமாக உள்ளது. இந்நிலையில் இன்று தங்கம் இவ்வளவு விலை குறைய என்ன காரணம் என்பது குறித்து பொருளாதரா நிபுணர்கள் பல கருத்துகளை கூறி வருகின்றனர்

 

அதன்படி, முதலாவதாக டாலர் மதிப்பிலேயே வேகமாக அதிகரித்து வந்த தங்கம் விலை தற்போது சரிந்துள்ளதால் இந்திய மதிப்பில் இது மிகவும் அதிகமாக உள்ளது. ஒரே நாளில் 6.3 சதவீதம் விலை சரிந்த தங்கம் ஒரு அவுன்ஸ் 4,082 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்காவில் 2013க்கு பிறகு நடைபெறும் மிகப்பெரிய தங்க விலை வீழ்ச்சி இதுவாகும்.

 

அதேபோல அமெரிக்கா - சீனா இடையே புவிசார் அரசியல் வாக்குவாதங்கள் இருந்து வந்த நிலையில் அவை சுமூகமாக மாறியுள்ளதால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அவற்றை விட்டு ஒரேயடியாக வெளியேறி டாலர்களில் முதலீடுகளை அதிகரித்ததும் இந்த விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

 

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை செய்ய உள்ளதாக நம்பிக்கை தெரிவித்ததால் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. இந்த மேற்கண்ட காரணிகளால் தங்கம் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்ந்து விலை வீழ்ச்சி அடையுமா என்பதை சர்வதேச காரணிகளே முடிவு செய்வதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதியில் கனமழை.. மழையிலும் குவிந்த பக்தர் வெள்ளம்! மழையில் நனைந்தபடி தரிசனம்..!