பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள ராஜேந்திரா அரசு மருத்துவமனை வளாகத்தில், ஒரு தெரு நாய் பச்சிளம் குழந்தையின் தலையை கவ்வி சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 5:30 மணியளவில் மருத்துவமனையின் 4-வது வார்டு அருகே இந்த கொடூரமான காட்சியை கண்ட மக்கள் மிகுந்த பீதி அடைந்தனர். இதையடுத்து, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் பல்பிர் சிங், உடனடியாக இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்பாகங்கள் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் மருத்துவமனைக்கு வெளியே இருந்து நடந்திருக்கலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் சந்தேகிக்கிறது. "முதல் கட்ட விசாரணையில், யாரோ ஒருவர் குழந்தையின் உடல்பாகங்களை வெளியே இருந்து கொண்டு வந்து மருத்துவமனை வளாகத்தில் வீசியிருக்கலாம் என்று தோன்றுகிறது," என்று டாக்டர் சோப்ரா கூறினார்.
காவல் துறையினரும் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்து, அப்பகுதியை பாதுகாத்து, ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினர்.