கேரளத்தில் நடைபெற உள்ள ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். .
பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளை அவமதித்து வருகிறது. சனாதன தர்மத்தை டெங்கு காய்ச்சலுடன் ஒப்பிட்டு அவரது மகன் கூறிய கருத்துகளே இதற்கு சான்று. தமிழ்நாட்டில் 35,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தபோதிலும், முதல்வர் ஸ்டாலின் இதுவரை எந்த கோயிலுக்கும் சென்றதில்லை.
கேரள முதல்வர் பினராயி விஜயன் ஸ்டாலின் குறித்து அறியாமல் இருந்திருக்கலாம், ஆனால் ஒரு பெரியார்வாதியான ஸ்டாலின் ஏன் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். இது ஐயப்பன் பக்தர்களை அவமதிக்கும் செயல், அரசியலுக்காக எதையும் செய்யலாம் என்ற இரட்டை வேட நிலைப்பாடு என்றும் அவர் விமர்சித்தார்.
இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இந்து மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.