அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய இருக்கும் நிலையில், அவருடன் மேலும் சில அவருடைய ஆதரவாளர்களும் அக்கட்சியில் இணை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
நேற்று மாலை விஜய்யை செங்கோட்டையன் சந்தித்து பேசினார் என்றும், இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பல முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க-விலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை 10 மணிக்கு விஜய்யின் முன்னிலையில் த.வெ.க-வில் இணைகிறார்.
அவருடன் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அ.தி.மு.க. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் சுந்தரவேல் முருகன் உள்ளிட்டோரும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.