அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், மாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
செங்கோட்டையன் தி.மு.க.வில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், விஜய்யுடனான இந்த சந்திப்பு தமிழக அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், கட்சியில் இணைவதற்கு முன் தனக்கு வழங்கப்படும் பதவி குறித்து விஜய்யுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, அவருக்கு கட்சியின் மிக முக்கிய பொறுப்பான அமைப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செங்கோட்டையன் நாளை காலை அதிகாரப்பூர்வமாக த.வெ.க.வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது வருகை த.வெ.க.வுக்கு அரசியல் பலத்தை அளிக்கும்.