தென்னிந்திய சினிமவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமாவில் தனது திரை வாழ்க்கையை தொடங்கினாலும் இப்போது இந்தி சினிமா வரை உயர்ந்துள்ளார். அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் நாளை தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகிறது.
அதையொட்டி அவர் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம் “சிரஞ்சீவி, விஜய் ஆகியவர்களில் யார் சிறந்த டான்ஸர்? என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கீர்த்தி சுரேஷ் விஜய் எனக் கூறினார். இது சிரஞ்சீவி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த கீர்த்தியைக் கண்டிக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து தற்போது கீர்த்தி அதற்கு விளக்கமளித்துள்ளார். அதில் “நான் சிரஞ்சீவி சாரை அவமதிக்கும் நோக்கில் அதை சொல்லவில்லை. நான் சிறு வயதில் இருந்தே விஜய் சாரின் படங்களைப் பார்த்து வளர்ந்ததால் என்னுடைய பதில் அதுவாக இருந்தது. நான் இதை சிரஞ்சீவி சாரிடமே சொன்னேன். அதை அவர் புன்னகையோடு எதிர்கொண்டார். நான் யார் மனதையும் புண்படுத்த அப்படி சொல்லவில்லை. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.