கஞ்சா போதையில் பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகனை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை அம்பத்தூர் அருகே நடந்துள்ளது.
சென்னை, அம்பத்தூரை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த பன்றி இறைச்சி வியாபாரி மன்மதன். இவரது மகன் ஸ்ரீதர் ஆட்டோ ஓட்டுநர். மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான ஸ்ரீதர், அடிக்கடி வீட்டிற்கு பெண்களை அழைத்து வந்து, பெற்றோருடன் சண்டையிட்டு அவர்களை தாக்கி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, போதையில் வந்த ஸ்ரீதர் தன் பெற்றோரை மீண்டும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மன்மதன், ஆத்திரத்தில் இறைச்சி வெட்டும் கத்தியால் ஸ்ரீதரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
கொலைக்கு பிறகு, மகனின் உடலை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, தாய் கல்யாணியை மகள் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, மன்மதன் தன் வழக்கமான வேலைக்கு சென்றுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் மன்மதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் கல்யாணியையும் அம்பத்தூர் போலீசார் கைது செய்து, இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.