காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் எம்.பி., பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது, காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அத்வானியின் நீண்ட கால அரசியல் சேவையை பாராட்டிய சசி தரூர், நேரு மற்றும் இந்திரா காந்தியை மேற்கோள் காட்டி, அத்வானிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சசி தரூரின் இந்தக் கருத்தில் இருந்து கட்சி விலகி இருப்பதாக காங்கிரஸ் ஊடக துறைத் தலைவர் பவன் கேரா தெரிவித்தார். "இது சசி தரூரின் தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறினார்.
மேலும், "காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக இருக்கும் அவர் தொடர்ந்து இப்படி செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் பவன் கேரா வெளிப்படையாக விமர்சித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது மோடியை புகழ்ந்த சசி தரூர், தொடர்ந்து பாஜக தலைவர்களை பாராட்டி வருவது, அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.