தருமபுரியில் உயர் அழுத்த மின் பாதையை தொட்ட ஆண் யானை உயிரிழந்தது.
பாலக்கோடு வனச் சரகம் பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண் யானை ஒன்று விளை நிலங்களில் நடமாடி வந்தது.
ஏற்கனவே மூன்று யானைகள் பலியானதை அடுத்து நேற்று தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.
இதன் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாக விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.