கதிர், ஓவியா நடிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய 'மதயானைக்கூட்டம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மதயானைக் கூட்டம் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் கழிந்த  நிலையில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் தனது அடுத்த படத்தை முடித்துள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடித்துள்ளார்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்த படத்தின் இசை வெளியீடு விரைவில் துபாயில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் சாந்தனுவால் இன்னும் ஒரு பேர்சொல்லும் வெற்றியைப் பெற முடியவில்லை. இந்நிலையில் இந்த படத்தை பெரிதும் நம்பி அவர் கடின உழைப்பை செலுத்தி இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டியாக இந்த இசை வெளியீடு அமையும் என சொல்லப்படுகிறது.