Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து

oscar
, செவ்வாய், 14 மார்ச் 2023 (15:25 IST)
RRR திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு... நாட்டு... ' பாடலுக்கும், தமிழ்நாட்டில் உருவான #TheElephantWhisperers எனும் ஆவண படத்திற்கும்  "#ஆஸ்கர் விருது" வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த  இந்தியாவை சேர்ந்த இரண்டு திரைப்பட படைப்புகளுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதைப் பெற்றது. மேலும் தமிழ்நாட்டின் முதுமலை யானைகள் காப்பகம் மற்றும் ஆதரவற்ற யானைகளை வளர்க்கும் தம்பதிகள் பற்றி உருவாக்கப்பட்ட தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறும்படத்துக்கு சிறந்த குறும்படப் பிரிவில் விருது வென்றது.

இந்தியர்களில் பெருமிதமும், மகிழ்ச்சியான நாளாக நேற்று அமைந்தது. ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற படம் உருவாகக் காரணமான தம்பதி பொம்மன், பெல்லி ஆகியோரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘இந்திய சுதந்திர போராட்டக்களத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட #RRR  திரைப்பட இசையமைப்பாளர் திரு. கீரவாணி  (எ) மரகதமணி , இயக்குனர்  ராஜமெளலி  மற்றும் திரைப்பட குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு டுவிட்டில், ‘தாயைப் பிரிந்து தவித்த யானைக் குட்டிகளை பராமரிக்கும் தம்பதியின் கதையை மையமாகக்கொண்டு, சிறந்த குறும்படப் பிரிவில் #ஆஸ்கர் விருது வென்றுள்ள #TheElephantWhisphers  படக்குழுவினருக்கு வாழ்த்துகள். தாயைப் பிரிந்து தவித்த 2 யானை குட்டிகளை, பெற்ற குழந்தைகளைப்போல் பராமரித்து, தமிழர் பெருமையை உலக அரங்கில் கொண்டு சேர்த்த தமிழக பழங்குடியினத் தம்பதி பொம்மன், பெல்லி அவர்களை தேமுதிக சார்பில்  மனதார பாராட்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வினொத் படத்தில் கமல் நடிக்கிறாரா இல்லையா? லேட்டஸ்ட் தகவல்!