கர்நாடக மாநில சட்டசபை தேர்தலின் போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு இவ்வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே கூட்டணி இன்றி தனித்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ளுமா அல்லது காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.