Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் இதையெல்லாம் ஒழுங்கா ஃபாலோ பண்ணனும்!.. தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி!..

Advertiesment
vijay
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றபோது அசம்பாவிதம் ஏற்பட்டு 41 பேர் வரை உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்கு பின்னர் விஜய் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். இவ்வளவு பேருக்கு மட்டும்தான் அனுமதி.. அவர்களும் QR Code மூலம் அனுமதி பெற்று உள்ளே வர வேண்டும். கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த வசதியெல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி SOP விதிமுறைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதேநேரம் தற்போது தேர்தல் அறிவித்து விட்டதால் காவல் துறையை விட தேர்தல் ஆணையத்திற்கு அதிக பவர் உண்டு.. எனவே எங்கு எந்த கட்சி எங்கு அரசியல் கூட்டம் போட்டாலும், பிரச்சாரம் செய்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்..
எனவே இனிமேல் தமிழக காவல்துறையால் சொல்லப்படும் இந்த SOP-ஐ பின்பற்ற தேவையில்லை என விஜய் சந்தோஷப்பட்டார். அதோடு, பெரம்பூர் தொகுதியில் நாளை அவர் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.

இந்நிலையில்தான், தேர்தல் ஆணையத்தின் சென்னை அதிகாரி குமரகுருபன் சில முக்கிய கட்டுப்பாடுகளை சொல்லியிருக்கிறார். நாளை கூட்டம் நடத்தப் போகிறோம் என ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தால் அனுமதி தர முடியாது.. முறையான நடைமுறைகளை பின்பற்றி ஆன்லைனில் 48 நேரத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்..

விஜய் கட்டாயமாக குறிப்பிட்ட நேரத்தில் வர வேண்டும்.. அரசியல் கூட்டங்களுக்கு Suvidha இணையதளம் மூலம் 48 நேரத்திற்கு முன்பு அனுமதி பெற வேண்டும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் அனுமதி கிடைக்கும்.. நேரில் மனு கொடுத்தாலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலும் அனுமதி கிடைக்கும்.. காவல்துறை அனுமதி அளிக்காத இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி இல்லை’ என கூறியிருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கானிஸ்தானின் புதிய இ-விசா முறை: இந்தியர்களுக்கு மட்டும் அனுமதி இல்லை..!