Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டசபை தேர்தல் எதிரொலி!.. டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு..

Advertiesment
tasmac
தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழக அரசியல் தலைவர்கள் பல தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்த நிலையில் இந்த முறையும் தாங்களே வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.. ஒருபக்கம் புதிய அரசியல் சக்தியாக விஜயும் உருவாகி வருகிறார்.. அவரின் தவெக முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. எனவே, 2026 சட்டமன்ற தேர்தல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில்தான் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 21ம் தேதி முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
என்னதான் தேர்தல் ஆணையம் நடவைக்கை எடுத்தாலும் தேர்தலுக்கு மதுபானங்களை அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்பே வாங்கி பதுக்கி வைத்து விடுவார்கள் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருச்சி...புதுக்கோட்டை.. தருமபுரி.. நாளை எங்கு பிரச்சாரம் செய்கிறார் விஜய்?.. ஒரே குழப்பமா இருக்கே!..