Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சி...புதுக்கோட்டை.. தருமபுரி.. நாளை எங்கு பிரச்சாரம் செய்கிறார் விஜய்?.. ஒரே குழப்பமா இருக்கே!..

Advertiesment
vijay
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். அவர் துவங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்தின் சில தொகுதிகளுக்கு சென்று விஜய் பிரச்சாரம் செய்தார்.

அதேநேரம் மற்ற அரசியல் தலைவர்கள் போல விஜய் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதில்லை ஒருநாள் பிரச்சாரம் செய்தால் இரண்டு நாட்கள் ஓய்வு என்கிற மனநிலையில் இருக்கிறார். ஏற்கனவே பலமுறை பல தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தும் அந்த பிரச்சாரங்களை விஜய் ரத்து செய்தார்.. எனவே தமிழகத்தில்  சில தொகுதிகளில் மட்டுமே விஜய் பிரச்சாரம் செய்வார் என கணிக்கப்படுகிறது..

இந்நிலையில்தான், விஜய் நாளை தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், நாளை அவர் திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்கிற செய்தி வெளியானது. இந்நிலையில்தான், விஜய் நாளை தர்மபுரியில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார் என்கிற செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

எனவே அவர் எங்குதான் நாளை பிரச்சாரம் செய்கிறார் என்று குழப்பம் தவெக தொண்டர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.. இந்நிலையில்,  நாளை திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் நடக்கவிருந்த பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.அதற்கு பதிலாக நாளை தர்மபுரியில் விஜய் பிரச்சாரம் செய்வது உறுதியாகியிருக்கிறது. மேலும், திருப்பூர் அவினாசி பேருந்து நிலையம் அருகே அவர் ரோட் ஷோட் நடத்தவும் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொந்த நாட்டு மக்களை தாக்கிய விமானப்படை!.. நைஜீரியாவில் அப்பாவி மக்கள் 100 பேர் பலி!...