தேசிய நெடுஞ்சாலை மற்றும் தொழில் மேம்பாட்டு கழகத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர்.
பொது நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் விற்று மோசடியாக இழப்பீடு பெற்றது விசாரணையில் தெரியவந்தது. விஜிபி குழுமத்தை சேர்ந்த விஜிஎஸ் ராஜேஷ் உட்பட பல தனிநபர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையின் முடிவில், மொத்தம் ரூ.18.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் மற்றும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் விவரங்கள்:
ரொக்கம்: ரூ.1.56 கோடி
தங்கம்: ரூ.74 லட்சம் மதிப்புள்ள நகைகள்
மேலும் ரூ.8.4 கோடி வங்கிக் கணக்கு இருப்பு மற்றும் ரூ.7.4 கோடி மதிப்புள்ள பங்குகள் முடக்கம் செய்யப்பட்டன.
இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தொடர் விசாரணை நடத்தி வருகிறது.