Publish Date: Fri, 21 Nov 2025 (10:00 IST)
Updated Date: Fri, 21 Nov 2025 (10:02 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், இன்று திடீரென பங்குச்சந்தை சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 216 புள்ளிகள் சரிந்து 85,411 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்கு சந்தை நிஃப்டி 73புள்ளிகள் சரிந்து 26,115 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், இண்டிகோ, கோடக் மகேந்திரா வங்கி, மாருதி, சன் பார்மா, டைட்டன் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளது.
அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, HCL டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.