Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

Advertiesment
கே.என். நேரு

Siva

, புதன், 29 அக்டோபர் 2025 (15:17 IST)
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணி நியமனத்தில் நடந்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ள ஊழல் புகார்களை அத்துறை அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டமாக மறுத்துள்ளார். 
 
 
2011 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் நிரப்பப்படாத 2,569 காலி பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வெளிப்படையான முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
 
2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியதில், முறைகேடு குறித்து ஒரு ஆட்சேபணை கூட பெறப்படவில்லை என அமைச்சர் கே.என். நேரு சுட்டிக்காட்டினார். அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சுயாட்சி நிறுவனம் என்றும், முந்தைய ஆட்சிகளிலும் இதே பல்கலைக்கழகமே தேர்வுகளை நடத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த அவதூறு முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாகவும், இதை முறியடிக்க தேவையான அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் நகராட்சி நிர்வாகத் துறை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்தார்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்