பெங்களூருவை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் மகேந்திர ரெட்டி ஜி.எஸ்., தனது மனைவி, தோல் நோய் நிபுணர் டாக்டர் க்ரூத்திகா எம். ரெட்டியை மயக்க மருந்து கொடுத்து கொன்ற வழக்கில் கடந்த கைது செய்யப்பட்டார்.
சிகிச்சை என்ற பெயரில் மகேந்திரா தனது மனைவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் நரம்பு வழி ஊசிகளை செலுத்தியுள்ளார். அவர் மருத்துவமனையில் இறக்கும்போது, அது இயற்கைக்கு மாறான மரணமாக பதிவு செய்யப்பட்டது. ஆறு மாதங்களுக்கு பிறகு, க்ரூத்திகாவின் சகோதரியின் சந்தேகம் மற்றும் ஃபாரன்சிக் ஆய்வறிக்கையின் அடிப்படையில், க்ரூத்திகாவின் உடலில் புரோபோஃபோல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, வழக்கு கொலையாக மாற்றப்பட்டது.
கொலைக்கு பிறகு, மகேந்திரா தான் விரும்பிய பெண்களின் பழைய உறவுகளை மீண்டும் புதுப்பிக்க முயன்றார். அப்போது, அவர் ஃபோன்பே பரிவர்த்தனை குறிப்புகள் மூலம், குறைந்தது நான்கு அல்லது ஐந்து பெண்களுக்கு "உனக்காகவே என் மனைவியை கொன்றேன்" என்ற அதிர்ச்சியூட்டும் செய்தியை அனுப்பியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றப் பின்னணி கொண்ட குடும்பத்தை சேர்ந்த மகேந்திராவின் குற்ற விவரங்கள் திருமணத்தின்போது மறைக்கப்பட்டதாகவும் க்ரூத்திகாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.