சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நில அதிர்வு

ஞாயிறு, 22 ஜூலை 2018 (09:01 IST)
சேலத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, கமலாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
 
மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததாலேயே நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ரஜினிக்கு ராகுல் தூதா? ராகுலுக்கு ரஜினி தூதா?