வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் ஆணையத்தின் இந்த திருத்த நடவடிக்கையை அவசரம் என கூறி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்துக்கு 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தை, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் , நாம் தமிழர் கட்சி, ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு உள்ளிட்ட சுமார் 20 கட்சிகள் புறக்கணித்தன.
திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
20 கட்சிகள் புறக்கணித்ததால் இந்த கூட்டம் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.